இந்த வருடத்தின் மிகப் பெரிய நிலா... காணக்கிடைக்காத அதிசய நிகழ்வு

Super Moon 2012 Reviewed Pictures Go Viral இந்த ஆண்டின் மிகப்பெரிய நிலவு ஞாயிறு இரவு வானில் தென்பட்டது. மற்ற பவுர்ணமி நாட்களை விட இந்த நிலா நிலா 14 சதவிகிதம் பெரிதாகவும் 30 சதவிகிதம் அதிக வெளிச்சமாகவும் இருந்ததாக வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பவுர்ணமி நாளில் வானத்தில் நிலவைக் காண்பது மகிழ்ச்சியான விசயம். அதுவும் சித்திரை பவுர்ணமி நாளில் ஆற்று மணலில் அமர்ந்து உணவு உண்டவாறு பவுர்ணமியை ரசிப்பது பாரம்பரியமான ஒன்று. இந்த ஆண்டு அறிவியர் அதிசயம் நிகழ்ந்த நாளாகவும் அது மாறிவிட்டது.

இந்த சித்திரா பவுர்ணமி நாளில் நிலவு வழக்கமானதை விட அளவில் 14% பெரிதாகவும், மற்ற பவுர்ணமிகளை விட 30% பிரகாசமாகவும் இருந்தது. காணக்கிடைக்காத இந்த அதிசய நிகழ்வினை பலரும் கண்டு ரசித்து படம் பிடித்தனர்.

நாசா வெளியிட்டுள்ள தகவல்படி இதற்கு முன்னர், 1955, 1974, 1992, 2005, 2011 ஆம் ஆண்டுகளில் இதுப்போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், பூமிக்கு மிக அருகில் நிலா வரும் நிகழ்வு ஜனவரி 1912-க்கு பிறகு இப்போதுதான் நிகழ்கிறதாம்.

இதற்கு அப்புறம் ஜூன் 23, 2013 ஆம் ஆண்டு தான் பூமிக்கு அருகில் நிலா வரும்.

ஞாயிறுக்கிழமை இந்த அரிய காட்சியை காண தவறியவர்கள் இதேப் போன்ற பிரகாசமான நிலவைக் காண இன்னும் 13 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சித்திரை பவுர்ணமியோடு இந்த அரிய காட்சியை காண்பது இனிமேலும் சாத்தியமில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Comments