ஐ.பி.எல்லே வேண்டாம்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய ஷாருக்கானுக்கு தடை விதிக்கப்பட்டது பற்றி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த லாலு, ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்த வேண்டும் என்றார்.
மும்பை வான்கடே மைதானத்தில் மதுபோதையில் ஷாருக்கான் தகராறு செய்ததால் அவர் அந்த மைதானத்துக்குள் நுழைய 5 ஆண்டு தடைவிதித்துள்ளது மும்பை கிரிக்கெட் சங்கம்.
ஆனால் தமது குழந்தைகளைப் பாதுகாக்கவே கோபப்பட்டேன்... மது அருந்திவிட்டு தகராறு செய்யவில்லை என்று நடிகர் ஷாருக்கான் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத், ஐ.பி.எல். போட்டிகளை நிறுத்தக் கோரி வரும் 20-ந் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இதேபோல் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவும், இந்திய கலாசாரத்துக்கு எதிராக அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் வலம் வரும் இந்த ஐ.பி.எல். போட்டிகளே வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ்வும் கூட அரசாங்கம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Comments