சிறைகளை நிரப்பவே லோக்பால் உதவும்: அப்துல் கலாம்
ராஞ்சி :"லோக்பால் மசோதா நிறைவேறினால், சிறைகள்தான் நிரம்பும், லஞ்ச
ஊழலை ஒழிப்பதில் சிறுவர், சிறுமியர் முக்கிய பங்காற்ற வேண்டும்' என,
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
ராஞ்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கலாம், சிறுவர்களிடையே
பேசியதாவது:லஞ்ச ஊழலில் சிக்கும் ஒருவர் குற்றவாளி என, நிரூபணமாகும்
பட்சத்தில் அவரை சிறையில் அடைக்கத்தான் லோக்பால் சட்டம் உதவும். இதன்
மூலம் பலரும் சிறையில் அடைக்கப்படுவர். இதற்குத்தான் லோக்பால் உதவும்.
ஆனால், நாம் வேண்டுவது அதுவல்ல, நல்ல மனிதர்களைத்தான்.லஞ்ச, ஊழலை, தங்களது
வீடுகளிலிருந்தே சிறுவர்கள் களைய முற்பட வேண்டும். "எங்கள் குடும்பத்தில்
எந்த வகையிலும் ஊழலுக்கு இடமே இல்லை' என்ற உறுதிமொழியை சிறுவர்கள் ஏற்க
வேண்டும். லஞ்ச லாவண்யம் ஒழிய இது ஒன்றுதான் வழி. இளைஞர்கள்தான் இந்த
நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கை. இவ்வாறு கலாம் பேசினார்.
Comments