கைலாசநாதர் கோயில் தேர் கவிழ்ந்து 5பேர் பலி - 15 பேர் படுகாயம்

Current eventsதிருவண்ணாமலை: ஆரணி கைலாச நாதர் கோயில் தேர் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள், 15பேர் படுகாயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆரணி கோட்டை மைதானத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பார்வதி உடனுரை கைலாச நாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது, இதனை முன்னிட்டு கைலாசநாதர் மற்றும் பார்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து 60 அடி உயரம் கொண்ட தேரில் கைலாசநாதர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வடம் பிடிக்கும் நிகழ்ச்சி இன்று காலை 10மணி அளவில் தொடங்கியது.இந்த மிகப்பிரமாண்டமான இந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று வீதி உலா வந்தனர். அப்போது நகரின் முக்கிய வீதி வழியாக சென்று மாலை 6.15 மணி அளவில் ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது தேரின் முன்பக்க அச்சு முரிந்து தேரின் முன்சக்கரம் தனியாக கழன்று சென்று தேர் நிலை சாய்ந்தது, இதில் தேரின் அடியில் சிக்கி ஆரணி எஸ்.வி., நகரத்தை சேர்ந்த செங்கல்வராயன்(50), இவரது மகன் ராமதாஸ்(30), ஜவகர்(30), சபரி(27), மற்றும் சரவணன்(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையிலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comments