கூடங்குளம்: வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்த 23,000 பேர்
நெல்லை: மத்திய, மாநில அரசுகள் கூடங்குளம் பகுதி மக்களை கண்டுகொள்ளாததால் 9
கிராமங்களைச் சேர்ந்த 23,000 பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை
போராட்டக்குழு தலைவர் உதயகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் போராட்டக்குழுவினர் 7 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும், பாதுகாப்பு, இட ஆய்வறிக்கைகளை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்குழுவினர் 4வது கட்டமாக மே 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். நேற்று 8வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. உண்ணாவிரத போராட்டத்தில் இதுவரை மயங்கிய 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 340 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் பகுதி மக்களின் கருத்துகளை கேட்காமல் மத்திய, மாநில அரசுகள் அணு மின் நிலைய திட்டத்தை திணிக்கின்றன. 60 ஊர்களைச் சேர்ந்த மக்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான கருத்துகளை நோட்டில் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். இதை உச்ச நீதிமன்றதுக்கு எடுத்து செல்ல உள்ளோம். மாநில அரசுகள் எங்களை வெறும் வாக்களார்களாகவே பார்க்கின்றன. எனவே எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை தேவையில்லை. வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப அரசிடமே ஒப்படைக்க உள்ளோம். தற்போது இடிந்தகரை, தோமையார்புரம், பெருமணல், கூடங்குளம், வைரவிகிணறு, கூத்தங்குளி, கூட்டப்புலி, ஆவடையாள்புரம் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த 23,000 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஏற்கனவே கொடுத்துவிட்டனர்.
இன்னும் சில ஊர்களில் இருந்து அடையாள அட்டைகள் வரவேண்டி இருப்பதால் மே 10ம் தேதி காலை நெல்லை கலெக்டரிடம் மொத்தமாக வாக்காளர் அடையாள அட்டைகள் ஒப்படைக்கப்படும். இடிந்தகரையில் இந்திய உயிர்களுக்கு மதிப்பு கொடு என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளோம். எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10ம் தேதி) முதல் மிகபெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம். காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்துவிட்டால் அதை தடுக்க தயாராக உள்ளோம். நாங்கள் அகிம்சை வழியில் போராடி வருகிறோம். எங்களில் 100 பேரையோ, 200 பேரையோ கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். ஒட்டு மொத்தமாக அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

Comments