அசாமில் படகு கவிழ்ந்தது; 200 பேர் பலி ? ; மீட்பு பணிக்கு ராணுவ வீரர்கள் சென்றனர்

கவுகாத்தி: அசாமில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்டோர் பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. பலர் உடல்களை மீட்பதில் புயல் , மழை பெரும் இடையூறாக இருப்பதாவும், தேசிய பேரிடர் ஆணையத்தினர் மற்றும் ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
அசாம், துப்ரி பகுதியிலிருந்து ஹத்சிங்கிமரி பகுதிக்கு செல்வதற்காக, 250 முதல் 300 பேர் ஒரு படகில் சென்றனர். பகிர் கஞ்ச் அருகே, பிரம்மபுத்திரா ஆற்றில், படகு சென்ற போது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 103 பேரது சடலம் மீட்கப்பட்டது. 25 பேர் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்ததாக தெரிகிறது. இன்னும் 100 பேர்கள் மாயமாகி விட்டனர். இவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு, ராணுவம், தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆறு படகுகள் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். கடும் மழையுடன், பலமான காற்றும் வீசியதால், இந்த விபத்து நடந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Comments