கறுப்பு பணத்திற்கு வெள்ளை அறிக்கை! கறுப்பு பணப்புழக்க நாடுகளில் இந்தியாவுக்கு 15 வது ரேங்க்
புதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், வரிஏய்ப்பு
தொடர்பான முழு விவரத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று
பார்லி.,யில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் முழு
உண்மை நிலவரத்தை தெரிவிப்பேன் என அவர் கூறியிருந்தும் வெளிநாடுகளில் பணம்
பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாமல் ஏமாற்றி விட்டார் பிரணாப் முகர்ஜி. .
100
பக்கம் கொண்ட இந்த அறிக்கையில் கறுப்பு பணம் ஒழிக்க கடும் நடவடிக்கைக்கு
யோசனை கறுப்பு பணம் மீட்பு தொடர்பான முக்கிய யோசனை உள்ளிட்டவை அடங்கியதாக
இந்த அறிக்கையி்ல் உள்ளது. மேலும் இந்த அறிக்கையில் ; கறுப்பு பணம்
புழக்கத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 15வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் 2406 பில்லியன் டாலர் கறுப்பு பணத்துடன் சீனா முதலிடத்தில்
உள்ளது. இந்தியாவில் 104 பில்லியன் டாலர் கறுப்பு பணம் உள்ளதாக
கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கறுப்பு பண நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, சவுதி
அரேபியா, மலேசியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், யு.ஏ.இ., இந்தோனேஷியா உள்ளிட்ட
நாடுகளும் உள்ளன. கறுப்பு பண புழக்கத்தை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை
தீவிரப்படுத்தும்; கறுப்பு பணம் புழக்கத்திற்கு முக்கிய காரணமான வரி
ஏய்ப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சுவிசில் கறுப்பு பண பதுக்கல் குறைந்தது: சுவிட்சர்லாந்தில்
கறுப்பு பணம் பதுக்கல் வெகுவாக குறைந்திருப்பதாகவும் பிரணாப்
தெரிவித்தார். இங்கு பதுக்கப்படும் பணம் ரூ. 23 ஆயிரத்து 373 கோடி ( 2006
ல் ) , இருந்து 9 ஆயிரத்து 295 கோடியாக குறைந்திருக்கிறது.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஏய்ப்பு செய்யும் பொருட்டு பல கோடிகளை பணமுதலைகள் சுவிஸ்
வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த கறுப்பு பணத்தை கொண்டு வந்தால்
நாட்டின் அடிப்படை வசதிகளை நிரப்பிட முடியும். எனவே சமூக ஆர்வலர் அன்னா
ஹசாரே , பாபா யோகாகுரு பாபா ராம்தேவ் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த
போராட்டத்திற்கு இன்றைய வெள்ளை அறிக்கையில் பலன்தரும் விஷயங்கள் இருக்குமா
? எவ்வளவு பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிய
வரலாம். கறுப்பு பணம் குறித்த தகவல் அறிவதில் வெளிநாடுகளுடனான ஒப்பந்த சட்ட
சிக்கல் ஒரளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து
முக்கிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
நிறைவேறுமா லோக்பால் ? :
இதற்கிடையில் லோக்பால் மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு
நிறைவேற்ற காங்., முழு அளவில் முயற்சிக்கிறது, இருப்பினும் இது வலுவான
மசோதா அல்ல என்றும் , சில திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்றும் பா.ஜ.,
வலியுறுத்துகிறது. இதனால் இந்த மசோதா இன்று நிறைவேறுமா என்பது சந்தேகமே !
Comments