சியாச்சின் பகுதியில் ராணுவம் வாபஸ் இல்லை
லாகூர்: பனிமலைப் பிரதேசமான சியாச்சின் பகுதியிலிருந்து ராணுவத்தை வாபஸ்
பெற முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு
முன்பு சியாச்சின் பகுதியில் கியாரி என்ற இடத்தில் இருந்த பாகிஸ்தான்
ராணுவ முகாம் பனிமலைச் சரிவில் புதைந்தது. இதனால் முகாமில் இருந்த 138
பேரும் உயிருடன் புதைந்தனர். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி
இதுகுறித்து நேற்று கூறுகையில், சியாச்சின் பனிமலைப் பகுதி உலகின் கடின
மான போர்க்களம் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு மோசமான வானிலை உட்பட பல
பிரச்னைகள் இருப்பதை அறிவோம். எனினும், அங்கிருந்து ராணுவத்தை வாபஸ் பெற
முடியாது. அதேநேரம், இந்திய அரசு ராணுவத்தை அங்கி ருந்து வாபஸ் பெற்றால்
நாங்களும் வாபஸ் பெறத் தயார். இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளையும்
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம் என்றார்.
Comments