பஞ்சாப்கிஸ்லெவன் அணியை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ் அணி

Sachin Tendulkarமும்பை: ஐ.பி.எல்.5-வது தொடரில் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் வலுவில்லாத கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து விளையாடாமல் இருந்து வரும் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இம்முறையாவது அணிக்கு வருவாரா என்று மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அவரது வருகையால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புத்துயிர் கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் இன்றைய போட்டியில் மிரட்டல் மலிங்கா இல்லாமல் போவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

4 போட்டிகளில் பங்கேற்ற மலிங்கா 9 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். இந்த அசுர பலம் இப்போது இல்லாத நிலையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மலிங்காவூக்குப் பதில் மெக்கே அந்த இடத்தை நிரப்புவாரா என்ர கேள்வியும் உள்ளது. முனாப் பட்டேலின் பந்துவீச்சு ஒரு ஆதரவுப் பலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு. ஆனால் கேப்டன் ஹர்பஜன்சிங்தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சொதப்பல் பந்துவீச்சை வெலிப்படுத்தினார். அதை இன்று செய்யாமல் இருந்தாலே போதும். இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் களமிறங்கக் கூடும் என எதிர்பார்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எதிர்பார்ப்புக்குரியவர்களாக ரோகித் ஷர்மா, பொல்லார்டு, ராயுடு, லெவி ஆகியோர் உள்ளனர். தினேஷ் கார்த்திக் ஒட்டுமொத்தமாக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் தசைபிடிப்பால் இன்று விளையாடுவது சந்தேகம். அவருக்குப் பதிலாக டேவிட் ஹஸ்ஸி அணியின் கேப்டனாக இருப்பார். இந்த அணியில் நம்பிக்கைக்குரிய ஆட்டக்காரர்களாக அசார் மசூத் உருவாகி உள்ளார். மிகவுமே எதிர்பார்க்கப்பட்ட வல்தாட்டி 6 போட்டிகளிலுமே சேர்த்து மொத்தமே 34 ரன்களை மட்டுமே எடுத்திருப்பது படு சொதப்பலான ஆட்டம்தான். ஷான் மார்ஷுக்கும் இதே நிலை. இந்த பார்மில் விளையாடினால் எப்படி வெல்வார்களோ? முக்கியமாக கடந்த 5 நாட்களில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு இது 3-வது போட்டி. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 நாள் ஓவ்யுக்குப் பிறகு களம் இறங்குகிரது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு அணிகளுமே வெற்றியை இலக்கு வைத்தே ஆட்டத்தை வெளிப்படுத்தும்.

Comments