சச்சினை வைத்து லாபம் பார்க்க நினைக்கிறார்கள்-ஹர்ஷா போக்ளே
சச்சினுக்கு எம்.பி பதவி கொடுத்துள்ளது குறித்து அவர் கூறுகையில், இப்போது சச்சினை வைத்து பலரும் பலனடைய பார்க்கிறார்கள். அவருக்கு எம்.பி பதவி கொடுத்தது சிறந்த யோசனை என்று எனக்குத் தோன்றவில்லை.
அவருக்கு பதவி கொடுத்தது கெளரவப்படுத்தத்தான் என்று கூறினால் அதை நான் மறுக்க மாட்டேன். ஆனால், டெண்டுல்கரை ஒரு அரசியல்வாதியாக பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. நாட்டு நடப்புகள் குறித்துக் கருத்துக் கூறவோ, முக்கியப் பிரச்சினைகளில் கருத்து கூறவோ அவருக்கு போதிய அனுபவம் இல்லை.
அவரை நான் மிக மிக நெருக்கத்தி்ல் இருந்து பார்த்து வருகிறேன் அவருடைய வாழ்க்கை முழுவதுமே கிரிக்கெட் மட்டும்தான். அப்படிப்பட்ட ஒருவர் அவர். இன்னும் ஒரு வருடமாவது சச்சின் விளையாட வேண்டும். பிறகுதான் மற்றவை குறித்து அவர் சிந்திக்க வேண்டும். இப்போதே கை நிறைய போட்டிகளை வைத்துள்ளார் அவர். இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கெல்லாம் அவர் எப்படிப் போகப் போகிறார் என்று தெரியவில்லை என்றார் போக்ளே.
Comments