தொடர் மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

தியாகதுருகம் : சேலம் அருகே தியாகதுருக்கத்தில் தொடரும் மின்வெட்டைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்வெட்டு நீடித்து வருகிறது. இது குறித்து துணை மின்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை சீராகவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தியாக துருகம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 10 கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் சித்தால், பேரால், சாத்தபுத்தூர், நூரோலை, பாவந்தூர், மேலப்பழங்கூர், அவிரியூர், அய்யனார்பாளையம், கீழ்பாடி, பின்னல்வாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டோரை சமாதனப்படுத்தினர். இதனால் மறியல் கைவிடப்படது.

Comments