கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பழிதீர்க்குமா ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Daniel Vettoriகொல்கத்தா: ஐ.பி.எல்.5-வது தொடரில் தம்மை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தி பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல்சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே தற்போதைய தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் உள்ளன. பெங்களூரில் நடந்த போட்டியில் சொந்த மண்ணில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 42 ரன்களில் வீழ்த்தியது கொல்கத்தா. இன்று கொல்கத்தாவின் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் இதர்கு பழிதீர்க்குமா பெங்களூர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பெங்களூரின் கேப்டன் வெட்டோரி காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. புயல் கெய்ல், டிவில்லியர்ஸ், தில்ஷன் என வலுவான பேட்டிங்கை கைவசம் வைத்திருக்கிறது ராயல்சேலஞ்சர் பெங்களூர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி, திவாரி ஆகியோர் இன்னமும் தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை

கொல்கத்தா அணி வலுவானதாக தொடர்ந்து இருக்கிறது. கேப்டன் காம்பீர், காலிஸ், திவாரி என பேட்டிங் சைடிலும் பந்துவீச்சில் பிரெட்லீ, நரின், பாலாஜியும் அசத்த நம்பிக்கையோடு இருக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இருப்பினும் அனல் பறக்கும் ஆட்டத்தை தடை செய்ய மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது ரசிகர்களை சற்றே ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

Comments