ஆட்சியர் அலெக்ஸை மீட்பது குறித்து மாவோயிஸ்டுகளுடன் தூதர்கள் இன்று ஆலோசனை

Alex Paul Menonராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட ஆட்சியரை மீட்பது தொடர்பாக மாவோயிஸ்டுகளுடன் பேச்சுநடத்துவதற்காக தூதர்கள் இருவர் இன்று வனப்பகுதிக்குள் சென்று உள்ளனர்.

மாவோயிஸ்டுகளால் நியமிக்கப்பட்ட தூதர்களான பேராசியர் ஹர்கோபால், பி.டி. சர்மா இருவரும் இன்று காலை சுக்மா வனப்பகுதிக்குள் சென்றனர்.

ஆட்சியரைக் கடத்திய மாவோயிஸ்டுகள் சிறையில் உள்ள 17 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தனர். இது தொடர்பாக சத்தீஸ்கர் அரசின் பிரதிநிதிகளுக்கும் மாவோயிஸ்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டு சுற்றுப் பேச்சு நடைபெற்றது.

அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை தெரிவிப்பதற்காக மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ள வனப்பகுதிக்குள் தூதர்கள் இருவரும் சென்றுள்ளனர். மாவோயிஸ்டுகளான சந்திப்புக்குப் பிறகு இன்று மாலை ராய்ப்பூர் திரும்பும் தூதர்கள் அரசு தரப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆட்சியர் அலெக்ஸ்மேனனை விடுவிப்பது தொடர்பாக சாதகமான செய்தி ஏதும் இன்று மாலை கிடைக்கலாம் என்று அவரது உறவினர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Comments