சுனாமி எச்சரிக்கை: சென்னை அருகே இந்திய- அமெரிக்க கடற்படை பயிற்சி நிறுத்தம்

சென்னை: இந்தோனேஷிய பூகம்பத்தையடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால், சென்னை கடலோரப் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய-அமெரிக்க கடற்படையினரின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்திய-அமெரிக்க கடற்படையினர் கடந்த சில நாட்களாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் மலபார் என்ற பெயரில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் இன்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பயிற்சி நிறுத்தப்பட்டுவிட்டது.

அதே போல சென்னை துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனைத்தையும் நடுக்கடலுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.

மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்களின் கதி என்னவானது என்பது குறித்து மீனவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Comments