நிலநடுக்கம்: சென்னை ரயில்-செல்போன் சேவைகள் பாதிப்பு-மக்கள் தவிப்பு
சென்னை: நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை காரணமாக சென்னையில் கடற்கரை
ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய மின்சார ரயில்கள் தாமதமாகின.
இதனால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
இந்தோனேசியாவில் அசே பகுதியில் இன்று மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா உள்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னையிலும் இன்று நிலஅதிர்வை மக்கள் உணர்ந்தனர். கட்டடங்கள், வீடுகள், வாகனங்கள் கிடுகிடுவென ஆடியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பயத்தில் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் அலுவலங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்ப்போர், பல்வேறு பணிகளுக்காக நகருக்குள் வந்தவர்கள் அவசரம் அவசரமாக வீடு திரும்பினர். இதனால் ரயில் நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்ததால் ரயில் நிலையஙகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
ஆனால் நிலநடுக்கம் மறறும் சுனாமி எச்சரிக்கை காரணமாக ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் பெரும் பீதியுடன் ரயில்களுக்காக காத்திருந்தனர்.

செல்போன் சேவை பாதிப்பு
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் செல்போன் சேவைகளும் சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னையில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அலுவலகங்களுக்கு சென்றவர்கள் அடித்து பிடித்து வீடுகளுக்கு செல்ல முயன்றதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலைகளில் நகரக் கூட இடமில்லாத அளவுக்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை வாகனங்கள் நின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Comments