ஓவராக ஆட்டம் போட மாட்டேன் : ஹன்சிக
இதுபற்றி அவர் கூறியதாவது: ‘டெல்லி பெல்லி’ இந்தி படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நான் நடிக்கிறேன். கண்ணன் இயக்குகிறார். இந்தியில் இப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதில் இடம் பெற்ற வசனங்கள் அவ்வளவு கடுமையாக இருந்தது. அதுபோல் வசனங்கள் பேசி நடிப்பீர்களா என்கிறார்கள். சினிமாவில் என் நிலை எனக்கு தெரியும். ஓவராக பேசுவது, ஓவராக ஆட்டம் போடுவது எனக்கு பிடிக்காது.
இந்தியில் கடுமையான வசனங்கள் இருந்தாலும் தமிழுக்கு ஏற்றபடி அந்த வசனங்களை இயக்குனர் மாற்றி இருக்கிறார். அதை கேட்ட பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தியில் இம்ரான்கான் ஏற்று நடித்த வேடத்தை தமிழில் ஆர்யா ஏற்றிருக்கிறார்.
தெலுங்கில் நாக சைதன்யா ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறேன். ‘கண்டிரீகா’ என்ற ஹிட் படத்தை கொடுத்த டீமுடன் மீண்டும் இதில் இணைகிறேன். இவ்வாறு ஹன்சிகா மோத்வானி கூறினார்.
Comments