இந்தியாவை பழிவாங்குகிறதா இலங்கை? இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறது!

கொழும்பு: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் தற்போது இந்தியாவை பழிவாங்கும் நடவடிக்கையில் அந்நாடு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது.

மேலும் இந்தியாவுக்கு திரிகோணமலையில் ஒதுக்கபட்டிருந்த எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஒப்பந்தத்தையும் இலங்கை ரத்து செய்யக் கூடும் எனத் தெரிகிறது.

இதேபோல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படக் கூடிய சிறிய ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சொகுசு வாகனங்களுக்கான இறக்குமதி வரியையும் இலங்கை அதிகரித்துள்ளது.

இதனால் இந்தியாவின் மாருதி, டாட்டா நானோ ஆகியவற்றின் விலை ரூ5 முதல் ரூ8 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

இந்தியா தவிர இதர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற இத்தகைய வாகனங்களுக்கு எதுவித இறக்குமதி வரி உயர்வும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments