புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியா? மே 17-ல் அறிவிக்கிறார் கருணாநிதி
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் (மே) 18-ந் தேதி தான் தொடங்குகிறது. எங்கள் நிலையை வருகிற 17-ந் தேதி அறிவிக்கிறோம் என்றார்.
மேலும் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படும் என்று நம்புகிறீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவேண்டும். ஆனால் நடுநிலையோடு தேர்தல் ஆணையம் செயல்படுமா என்பது கடந்த கால நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமனம் செய்திருப்பது பற்றி கேட்ட கேள்விக்கு அதை வரவேற்பதாக கருணாநிதி கூறினார்.
Comments