பாகிஸ்தானில் பனிச்சரிவு;135 வீரர்கள் பலி ?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவு இடைகளுக்குள் சிக்கி 135 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் பாக்., ராணுவம் தரப்பில் இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந்த செய்தி முதன் முதலாக வெளியானது. சர்ச்சைக்குரிய சியாச்சின் அருகே கியாரி என்ற ராணுவ மையத்தின் 6ம் பிளாக்கில் வீரர்கள் முகாம் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்து வருவது வழக்கம். இன்று காலையில் இங்கு பனிச்சரிவு ஏற்பட்டதாகவும் இதில் 135 பேர் சிக்கி தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்க ,மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சியாச்சின் உலகின் மிக உயர்ந்த பட்சம் குளிர் கொண்ட பகுதி ஆகும். காஷ்மீர் அருகில் இருக்கும் சியாச்சினில் பாக்., ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து இதனை இந்தியா முறியடித்தது. தற்போது பேச்சுவார்த்தை மூலம் படைகள் குறைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments