இந்தியா முழுவதும் 1.5 லட்சம் பேர் எழுதினர் 

சென்னை : விஐடி பல்கலை. பொறியியல் படிப்பில் சேரும் மாணவருக்கு அகில இந்திய நுழைவுத்தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். விஐடி பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு இந்தியா மற்றும் வெளிநாடுகள் என 238 மையங்களில் நேற்று நடந்தது. மதியம் 2.30மணி முதல் மாலை 5மணி வரை தேர்வு நடந்தது. 1 லட்சத்து 50 ஆயிரத்து 48 மாணவர்கள் எழுதினர். சென்னையில் விஐடி பல்கலைக்கழக வளாகம், சேத்துப்பட்டு எம்சிசி மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் மேற்கு எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, செனாய் நகர் தூய ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, அண்ணா நகர் ஆதர்ஷ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது. இதுகுறித்து, விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி.செல்வம் கூறுகையில், ‘‘சென்னையில் மட்டும் 2400க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். வெற்றிபெற்றவர்கள் வரும் மே 14ம் தேதி கவுன்சிலிங் அழைக்கப்படுவார்கள்’’ என்றார்.

Comments