'ஒரேயடியாக 37 சதவீத உயர்வா... ஓட்டுப்போட்டவங்களுக்கு ஜெ பரிசு இது'- கருணாநிதி

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள 37 விழுக்காடு மின்கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஓட்டுப் போட்ட மக்களுக்கு ஜெயலலிதா தந்துள்ள 'பெரிய பரிசு' இது என அவர் கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பத்து த காலத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை 5 சதவிகித உயர்வு, 10 சதவிகித உயர்வு அல்ல, ஒரேயடியாக ஒரே நேரத்தில் 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்து விட்டார்கள்.

எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட் கூடக் கிடைக்கக் கூடாது என்று எண்ணி 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சங்கரன் கோவில் தொகுதி இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததாகச் சொல்லப்படுகிற வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. அரசு அளித்த முதல் பெரிய பரிசு இது."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments