சிதம்பரம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான விமர்சனங்கள், விவாதங்கள் சட்டசபையில் நடந்தாலும் கூட, இதுவரை யாருமே நாகரீக எல்லையை மீறி நடந்து கொள்ளவில்லை.
ஆனால், சட்டசபையில் நாக்கை கடித்து எதிர்தரப்பை எச்சரிப்பது போல விஜயகாந்த் நடந்துகொண்ட அணுகுமுறை அவருக்கு அரசியலில் போதிய பக்குவம் இல்லாத நிலையை உறுதிப்படுத்துகிறது.
அதேசமயம், நாகரீகமற்ற முறையில் விஜயகாந்த் நடந்து கொண்டாலும், அவரை சட்டசபையில் இருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது ஏற்புடையைதல்ல என்றார் திருமாவளவன்.
ஏற்கனவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், விஜயகாந்த்தின் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டசபை என்ன சினிமா படம் எடுக்கும் இடமா என்று அவர் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments