ஆ.ராசா குற்றம் செய்தார் என நாங்கள் கூறவில்லை: காங்கிரஸ்

புதுடெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் நிதி அமைச்சகப் பரிந்துரைகளை ஆ.ராசா பின்பற்றவில்லை என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியிருந்ததை காங்கிரஸ் மறுத்துள்ளது.

கபில் சிபலின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கபில் சிபலின் பேடிக்கு விளக்க உரை அளித்து கூறியுள்ளதாவது:
முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை ஆ.ராசா கடைபிடித்ததால்தான் பிரச்சனை என்றுதான் கபில் சிபல் கூறினார். இதற்காகவே ஆ.ராசாவை அவர் குற்றவாளி எனக் கூறியதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

தற்போது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆ.ராசா பொறுப்பு. அதற்காக நாங்கள் அவரை குற்றவாளி எனக் கூறவில்லை என்றார்.

Comments