ப சிதம்பரத்துக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லை! - சிபிஐ அறிவிப்பு

டெல்லி: 2 ஜி முறைகேடு தொடர்பான விசாரணையில் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை, என மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ அறிவித்துள்ளது.

2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என சுப்பிரமணிய சாமி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஒபி சைனி இன்று வழக்கினை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், "2ஜி வழக்கில் முறையாக விசாரணை நடத்தி உள்ளோம். இதுவரை ப.சிதம்பரத்தின் மேல் எந்த குற்றமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை", என்றனர்.

இந்த நிலையில், ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்க்காமல், ஆ. ராசா மீதான வழக்கின் விசாரணை மார்ச் மாதம் 17-ந்தேதி தொடங்கும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Comments