எதிர்காலத்தில் நடக்கப்போவதை இப்போதே கூறமுடியாது : காங்.,

புதுடில்லி : காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. எனினும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை இப்போதை கூற முடியாது என்று தெரிவித்துள்ளது. ஸ்பெக்டரம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆபத்து நேர்ந்தால், 18 எம்.பி.,க்களுடன் மத்திய அரசை ஆதரிக்க தயார் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. எனினும் ஜெ., ஆபர் குறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் கருத்தை ஆமோதித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷகீல் அகமது, தற்போது காங்கிரஸ் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. எனினும் எதிர்காலத்தில் நடக்கப்போவதை இப்போதை கூற முடியாது என்று தெரிவித்துள்ளது, டில்லி அரசியலில் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Comments