புதுடில்லி :தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் மத்திய அமைச்சர் ராசாவை பதவியில் இருந்து நீக்கினால் ஆதரவு அளிக்க தயார் என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், தி.மு.க.,வுடன் கூட்டணி நீடிக்கிறது. ஜெயலலிதாவின் ஆதரவு குறித்து காங்கிரஸ் உயர்மட்ட குழுதான் முடிவு செய்யும் என்று கூறினார்.
Comments