அத்வானிக்கு ராகுல் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து

புதுடில்லி : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நேற்று 83வது பிறந்த நாள். இதனையடுத்து அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.  நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பார்லிமென்டில் உரையாற்றுவதை தொடர்ந்து அத்வானி நேற்று பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பதில் இன்று அவர் பிறந்த நாள் கொண்டாடினார்.  ஒபாமா பார்லிமென்டிலிருந்து சென்ற பின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலும்,  கட்சி தலைவர்சோனியாவும் பார்லிமென்டில் உள்ள அத்வானியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறி அவருடன் தேநீர் அருந்தியதாகவும், அப்போது அத்வானி மகள் பிரதீபாநாளை நடைபெறும் பிறந்த நாள் விழாவிற்கு வருமாறு சோனியா, ராகுலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். ஆனால் சோனியாவால் நேரில் வர முடியவில்லை.  ராகுல் நேரில் சென்று  வாழ்த்து கூறினார்.

Comments