தேனி : முதல்வர் கருணாநிதி, கலெக்டர்களுடன் 15 நாட்கள் தொடர் வீடியோ கான்பரன்சிங் நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் செய்து வருகின்றனர். முதல்வர் கருணாநிதி, அரசு துறைகளின் திட்டப்பணிகள், அவற்றின் முன்னேற்றம், தாமதமாகும் பணிகள் குறித்த விவரங்களை கலெக்டர்களுடன் நவ., 15ல் துவங்கி 30 வரை வீடியோ கான்பரன்சிங் முறையில் கேட்டறிய உள்ளார். முதல்வர் கேட்கும் விவரங்களை உடனுக்குடன் கொடுப்பதற்கு தயாராக மாவட்ட கலெக்டர்கள் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து முழு விவரங்களை சேகரித்து வைத்திருக்கவேண்டும் என, தலைமைச் செயலர் மாலதி, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Comments