காங்கிரஸ் மீது கருணாநிதிக்கு நம்பிக்கையில்லையா ? : ஜெ., கேள்வி

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மீது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நம்பிக்கையில்லாமல் போய்விட்டதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.
அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது : ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியுள்ளதை எதிர்த்து, முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் இருக்கிறார் என்றும், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் தான் இருப்பார் என்றும் கூறியிருந்தார். மேலும் பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை கோருவதன் மூலம் எதிர்க்கட்சியினருக்கு, பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுக்கணக்கு குழு தலைவர் மீது எதிர்கட்சியினருக்கு நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளாரே , அப்படி என்றால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லையா ?  பார்லிமென்ட் கூட்டு விசாரணைக் குழுவுக்கு ஆளுங் கட்சி எம்.பி., தான் தலைமை வகிப்பார். அப்படி என்றால் காங்கிரஸ் கட்சி மீது கருணாநிதிக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது என்பத‌ையே இது உணர்த்துகிறது.

மாஜி அமைச்சர் ராஜாவே தான் குற்றமற்றவர் என பல முறை பேட்டியளித்து வருகிறார். அவர் குற்றமற்றவர் ‌என்றால் பார்லி., கூட்டுக்குழு விசாரணையை ஏன் கருணாநிதி மறுக்க வேண்டும்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அ.தி.மு.க., தயாராக இருக்கிறது என தான் அளித்த அறிக்கையால் தான் ராஜா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments