இந்தியபெண்மணி அமெரிக்காவில் வரலாற்று சாதனை

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கவாழ் பெண் ஒருவர் தெற்கு கரோலினாவில் நடைபெற்ற கவர்னர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கவர்னர் தேர்தலில் வெற்றிபெற்ற முதல் பெண்மணி என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதுபற்றி விபரம் வருமாறு: அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தில் கவர்னர் பதவிக்காக குடியரசுகட்சிக்கும் அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கும் இடையே தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சிசார்பில் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலே போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் வின்சென்ட் சென்கான் என்பவரும் போட்டியிட்டனர். போட்டியில் நிக்கிஹேலே 52 சதவீதமும், வின்சென்ட் 46 சதவீதமும் வாக்குகளை வென்றுள்ளனர். இதன் மூலம் நிக்கியின் வெற்றி உறுதியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவில் கவர்னர் பதவிக்காக நடந்த தேர்தல்களில் இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே லூயிசியானா மகாணத்தில் பாபி ஜிந்தால் என்ற இந்திய பெண்மணி கவர்னராக பதவி வகித்துள்ளார். இருப்பினும் தெற்கு கரோலினா மாகாணத்தில் நிக்கி வெற்றிபெற்றுள்ளதன் முதல் இரண்டாவது பெண் கவர்னர் என்ற பெருமை ஒரு பக்கம், தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண்கவர்னர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இதுவரை பென்சில்வேனியா, கலிபோர்னியா, கன்ஸாஸ்,லூயிசியானா, ஓகியோ ஆகிய மாகாணங்களில்நடைபெற்ற தேர்தல்களில் ஐந்து இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அஸ்வின் லாட் என்ற இந்தியர் மட்டும் பெனிசில் வேனியாவில்நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார்.

Comments