நீதி விசாரணைக்கு தயார்: எடியூரப்பா

பெங்களூரூ: அரசுக்கு சொந்தமான நிலத்தை மாநில முதல்வர் எடியூரப்பா தன்னுடைய உறவினர்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார் என முன்னாள் முதல்வர் குமாரசுவாமி புகார் தெரிவித்துள்ளார். மேலும்முதல்வரின் மகன் மற்றும் துபாயை மையமாக கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் அதிபருக்காக வழங்கப்பட்ட நிலம் மூலம் ஊழல் புரிந்துள்ளார் என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த தயார் என்றும், தன் மகனுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் நிலங்கள் அனைத்தும் முறையான சட்டதிட்டங்களுங்கு உட்பட்டுதான் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்கட்சிகள் தங்கள் மீதுள்ள பல்வேறு வழக்குகளை மூடிமறைப்பதற்காகவேஎன்மீதான புகழை குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Comments