மும்பை : "மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தனது பொறுப்பை உணர்ந்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும்' என, இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 166 பேர் பலியாயினர். இந்தத் துயர சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினர் 18 பேர் உட்பட 166 பேரின் மறைவுக்கு, நாடு முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவு தினத்தை குறிக்கும் வகையில், மகாராஷ்டிரா போலீசார், மும்பையின் தென்பகுதியில் நேற்று அணிவகுப்பு ஒன்றை நடத்தினர். இந்த அணிவகுப்பானது, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான இடங்களில் ஒன்றான ஓபராய் டிரிடென்ட் ஓட்டலில் துவங்கியது, போலீஸ் ஜிம்கானாவை சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சியில், உயிரிழந்தவர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், நிருபர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: மும்பைத் தாக்குதல் துயர சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தத் தருணத்திலாவது பாகிஸ்தான் தன் பொறுப்பை உணர்ந்து செயல்படும் என, நம்புகிறோம். மும்பைத் தாக்குதல் சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிப்பது தொடர்பாக அளித்த உறுதிமொழிகளை பாகிஸ்தான் காப்பாற்ற வேண்டும். மும்பைத் தாக்குதல் தொடர்பாக ஏழு பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர்களின் பெயர்கள் பற்றிய விவரங்களும் இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், மும்பையில் தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளின் குரல் மாதிரிகளை பாக்., அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. நாம் நமது அண்டை நாட்டை நம்புகிறோம். அதே நேரத்தில், நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது. இதுவரை நாம் பெற்ற அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடம் அது. நாட்டையும், மக்களையும் பாதுகாக்க நமது ஒவ்வொரு சக்தியையும் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில், நமக்கு அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றாத நாடுதான், நமது அண்டை நாடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் போலீஸ் பிரிவில் மூன்று லட்சம் காலியிடங்கள் உள்ளன. போலீஸ் படையினர் விஷயத்தில் நாம் அக்கறை காட்டாவிடில், திறமையான போலீசை கொண்டிருக்க முடியாது. நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க போலீசாருக்கு முறையான ஷூக்கள், சீருடை, பயிற்சி, ஆயுதம், சம்பளம் மற்றும் வீட்டு வசதிகளையும் அளிக்க வேண்டியது அவசியம். மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் போது, பயங்கரவாதி அஜ்மல் கசாப் பிடிபட்டான். அவன் பிடிபட காரணமாக இருந்தவர் கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஓம்பாலே. அவரின் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. கசாப்பை உயிரோடு பிடித்திருக்கா விட்டால், மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருந்தது தெரிந்திருக்காது. இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
மக்களுக்கு வல்லமை: இதற்கிடையில், டில்லியில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் மும்பையில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். அதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். மனித இனத்திற்கு எதிராக இப்படிப்பட்ட மிகப்பெரிய குற்றம் புரிந்த சதிகாரர்கள், நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை இருமடங்காக்குவோம் என, நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளில் இந்தியா ஒருபோதும் சிக்காது. நமது சமூக கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சக்திகளை தோற்கடிக்கும் வல்லமை நம்நாட்டு மக்களுக்கு உண்டு. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Comments