காணாமல் போன மாணவி பிணமாக மீட்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் காணாமல்போன 5ம் வகுப்பு படிக்கும் மாணவி பிணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவரது மகள் மொட்டையம்மாள்(10). இவர் கண்ணகட்டை பகுதியில் குடியிருக்கும்தனது சித்தப்பா பாலகிருஷ்ணன் வீட்டில் தங்கி 5ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி கடந்த 14ம் தேதி காணாமல்போனதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மொட்டையம்மாள் இன்று  கிணறறில் கால்கள் கட்டிய நிலையில் பிணமாக கிடந்ததை அறிந்த போலீசார் அதனை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

Comments