குவாங்சு : சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் விஜேந்தர் சிங் காலிறுதியில் நுழைந்தார். இன்று நடந்த 75 கிலோ போட்டியில் தைபேயில் யு டிங் யங்கை 9-4 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தினார். கடந்த 2006ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments