சம்பள விவகாரம் : பி.சி.சி.ஐ., மீது கவாஸ்கர் குற்றச்சாட்டு

புதுடில்லி : ஐ.பி.எல்., நிர்வாக குழுவில் வகித்த பதவிக்காக பி.சி.சி.ஐ., இன்னும் சம்பளம் வழங்கவில்லை என கவாஸ்கர் கூறியுள்ளார். ஐ.பி.எல்., நிர்வாக குழுவில் பதவி வகித்து வந்த கவாஸ்கர் கடந்த மாதம், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கத்திற்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை. எனினும் சம்பள விவகாரம் காரணமாக இருக்கலாம்  என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கவாஸ்கர்,  கடந்த 3 வருடங்களாக ஐ.பி.எல்., நிர்வாக குழுவில் பதவி வகித்ததற்காக சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து நினைவு கடிதம் அனுப்பியும் இதுவரை தகவல் ஏதும் இல்லை என கூறினார்.

Comments