மும்பை : மகாராஷ்டிரா மாநில முதல்வர் அசோக் சவான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து சோனியா தேர்வு செயயும் நபரே முதல்வராகிறார். இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments