புதுச்சேரி :அன்னையின் நினைவு நாளை முன்னிட்டு, அரவிந்தர் ஆசிரமத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அவர் தங்கியிருந்த அறை, பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும்.அன்னையின் 37ம் ஆண்டு நினைவு நாளான 17ம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள், அன்னை தங்கியிருந்த அறையை தரிசனம் செய்தனர்.புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங், நேற்று காலை அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார். அவரை அரவிந்தர் அறக்கட்டளை நிர்வாகிகள் வரவேற்றனர். பின், அன்னையின் அறைக்கு சென்று கவர்னர் தரிசனம் செய்தார்.
Comments