புதுடில்லி : பிரதமரின் விருந்தை புறக்கணித்தது குறித்து மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா மூன்று நாள் பயணமாக அண்மையில் இந்தியா வந்தார். ஒபாமா தம்பதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்தார். இந்த விருந்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி கலந்துகொள்ளவில்லை.இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "பிரதமரின் விருந்தில் கலந்துகொள்ளாதது குறித்து, மக்களிடம், மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
Comments