தீபாவளி வாரத்தில் சரவெடியாக இருந்த சந்தை, தீபாவளி முடிந்தவுடன் ஊர் அமைதியானது போல அமைதியாகிவிட்டது. சந்தைக்கு என்ன ஆனது என்று எல்லாரும் கேட்கும் அளவு ஆகிவிட்டது. காற்று போன பலூன் போல, சந்தை இந்த வாரம் முழுவதும் ஒரு தளர்ந்த நிலையிலேயே இருந்தது.
முதல் இரு நாட்கள் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் விற்றாலும், பின்னர் சந்தை சுதாரித்து விடும் என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் தொழில் வளர்ச்சி பற்றி வந்த புள்ளி விவரங்கள் (இண்டஸ்டிரியல் புரடக்ஷன் புள்ளி விவரங்கள்) மற்றும் உலக நடப்புகள், சந்தையை கலகலத்துப் போக செய்துவிட்டன.சென்ற வாரம் சந்தை எவ்வளவு கலகலவென இருந்ததுவோ அவ்வளவு கலகலத்து போய்விட்டது இந்த வாரம். வியாழனும், வெள்ளியும் மும்பை பங்குச் சந்தையில் 712 புள்ளிகள் குறைந்தன. சந்தை திரும்ப 20,000 புள்ளியில் வந்து நிற்கிறது. உலக அளவிலும் சந்தைகள் இறங்கியது ஒரு காரணம்.
இந்திய சந்தைகள் 2 சதவீதம் அளவு வெள்ளியன்று இறங்கியது. சீனாவில் 5 சதவீதம் அளவும், பிரேசிலில் 0.79 சதவீதமும், ரஷ்யாவில் 0.91 சதவீதமும் குறைந்தன. சீனாவில் சந்தைகள் 5 சதவீத அளவு குறைந்ததால், உலக சந்தைகளில் ஒரு தயக்கம் இருந்தது; விற்பதும் அதிகமாக நடந்தது.இந்த இறக்கத்திற்கு காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை திரும்ப எடுத்தது தான். வெள்ளியன்று மட்டும் அவர்கள் 782 கோடி ரூபாய் அளவிற்கு விற்றுள்ளனர். வெள்ளியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 432 புள்ளிகள் குறைந்து 20,156 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 122 புள்ளிகள் குறைந்து 6,071 புள்ளிகளுடனும் முடிவடைந்தது.
ஐ.ஐ.பி.,இந்தியாவின் தொழில் வளர்ச்சி புள்ளி விவரங்கள் தான் இந்தியாவின் உயிர் நாடி. இந்த ஆண்டு செப்டம்பர் மாத தொழில் வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. இது, சென்ற ஆண்டில் இதே மாதத்தில் 8.2 சதவீதமாகவும், கடந்த ஆகஸ்டில் 6.9 சதவீதமாகவும் இருந்தது.
பவர்கிரிட்இந்த வாரம் சந்தை, பவர் கிரிடின் தொடர் வெளியீட்டை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அதாவது, வெளியீடு மொத்தமாக 14.77 தடவைகள் செலுத்தப்பட்டிருந்தன. சிறிய முதலீட்டாளர்கள் பகுதி 31.9 தடவைகள் செலுத்தப்பட்டிருந்தன. 1,105 பங்குகள் போட்டவர்களுக்கு 340 பங்குகள் வரை கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
அதிக லாபம் உடனடியாக கிடைக்கவில்லையென்றாலும், வருங்காலங்களில் பரிணமிக்கப் போகும் ஒரு பங்கு இது. பல புதிய திட்டங்களில் முதலீடு செய்துள்ள அரசாங்க கம்பெனி.ஸ்டேட் பாங்கின் உரிமை பங்கு வெளியீடுதனது பங்கு முதலீடை விரிவாக்கம் செய்வதற்காக ஸ்டேட் பாங்க் 20,000 கோடி ரூபாய் உரிமை பங்கு வெளியீடு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இன்னும் 15 நாட்களில் முடிவு தெரியும்.காலாண்டு முடிவுகள்ரிலையன்ஸ் பவர், எட்சர்வ், பனேசியா பயோடெக், ஜியோடெசிக், டாடா ஸ்டீல், டாடா பவர் போன்ற கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன.
தங்கச் சுரங்கத்தின் மேல் இந்தியாஉலகத்தில் இருக்கும் தங்கத்தில் 11 சதவீதம் இந்தியாவில் இருக்கிறது என்று வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் 18,000 டன் தங்கம் மக்களிடத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளது. இதை வைத்துப் பார்த்தால், ஒவ்வொரு இந்திய குடிமகனிடமும் 15 கிராம் தங்கம் சராசரியாக இருக்கிறது. இதற்கு மோகம் தான் காரணம்.தப்பு கணக்குஒன்றை பார்க்க வேண்டும், 2008லும் சந்தை எவ்வளவு விரைவாக ஏறியதோ அவ்வளவு விரைவாக இறங்கியது. அது போல, 20,000 புள்ளிகள் வரை கஷ்டப்பட்டு தான் சந்தை தற்போது திரும்பி வந்தது. ஆனால், 20,000 முதல் 21,000 புள்ளிகள் வரை வெகு வேகமாக 2008ல் ஏறியது; ஏறிய வேகத்திலேயே திரும்பியும் வந்தது. சந்தை கீழே இறங்கும் போது, என்ன மாதிரியெல்லாம் யோசிக்க வைக்கிறது.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்?சந்தையின் போக்கு மேலும் கீழுமாகத் தான் இருக்கும். ஆனால், அடிப்படையில் எந்த கோளாறும் இல்லை. சந்தை தற்போது உலக நடப்புகளுக்கு ஏற்று நடனமாடிக் கொண்டிருக்கிறது. சரிவுகளில் முதலீடு செய்யுங்கள்.-சேதுராமன் சாத்தப்பன்

Comments