சென்னை : ""ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், கரங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும்,'' என தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: அண்ணாதுரை கட்சியை துவங்கியதும், நான் முதன் முதலில், கட்சிக் கொடியை ஏற்றியது தூத்துக்குடியில்தான். அதனால், தூத்துக்குடியைப் பற்றி நான் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறேன். அங்கே ஏற்படும் மனமாச்சரியங்கள், பகை, பூசல்களுக்கு இடம் தராமல், கட்சியை அமைதியாக, சுறுசுறுப்பாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதை சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பதற்குத்தான் நான் இந்த கூட்டத்தை நடத்துகிறேன். நான், நிறைவாக பேசுவேன் என ஸ்டாலின் கூறினார். என் பேச்சு எப்போது நிறைவாக இருக்கும் என்றால், இது போன்ற கூட்டங்களை மாவட்டம் தோறும் நடத்தி முடித்து, வரவிருக்கின்ற தேர்தலில் அது எதிரொலித்தால்தான் மனநிறைவு ஏற்பட முடியும். தி.மு.க., தேர்தலுக்காக துவங்கப்பட்ட இயக்கம் இல்லை. அந்த அடிப்படை உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
திராவிட சமுதாயம் வளர்ச்சி பெற மைதானங்களில் பேசினால் போதாது. அதை சட்டசபை, பார்லிமென்டில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிட்டு வருகிறோம். இந்த முடிவால் தான், நான் முதன் முதலில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போது, நாடார் சமுதாயத்தின் பெயர் அரசின் பட்டியலில் "சாணான்' என இருந்ததை சாணார் என மாற்ற முடிந்தது. நமக்கு தேர்தலில் வெற்றி மாத்திரம் முக்கியமல்ல; நம் தமிழ் இன உணர்வை வலுப்படுத்துவதுதான் நம் நோக்கமாக இருக்க வேண்டும். மக்களுக்காக பணியாற்றுவதும், திராவிடக் கொள்கைகளை வளர்ப்பதும், ஆட்சி மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதும்தான் முக்கியம். ஆட்சியின் மூலம் தான், தமிழுக்கு செம்மொழி சிறப்பு கிடைத்தது. அதற்கு தி.மு.க.,தான் காரணம். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து, அவற்றை ஒதுக்கி விட்டு, கட்சி ஒன்றே என்ற குறிக்கோளோடு நாம் பணியாற்றினால், நாம் ஒற்றுமையாக இருந்தால், ஒன்றுபட்டு இருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது; வீழ்த்த முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
தூத்துக்குடியில் நான் எதிர்பார்த்தைப் போல், சிறு, சிறு சண்டைகள், குழுக்கள், இரண்டு, மூன்று என இருந்தாலும், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்னைகள் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைய முடியாது. மாவட்ட செயலர் பெரியசாமியும், அவருக்கு துணையாக அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அது நாம் தேடிப்பெற்ற வெற்றி. ஓடிக் கொண்டிருக்கின்ற ஆற்று வெள்ளத்தில், கிளை நதிகள் இணையும் போது இரண்டும் கலந்து ஒரே தண்ணீராக ஆவது போல், நீங்கள் ஜீவநதியாக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிறு, சிறு குறைகள் இருப்பதைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்களுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நீங்கள் அனைவரும் உங்கள் கரங்களை உயர்த்திக் காட்ட வேண்டும். அதோடு, அதை மனதில் நிறுத்தி, வெளியிலும் அந்த கரங்களை இணைத்துப் பிடித்து ஒற்றுமையோடு கட்சியை வளர்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Comments