கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், பா.ம.க ., மாநில துணைபொதுசெயலாளர் ராஜ்குமார் (40) மீது கொலை வெறிதாக்குதல் நடத்தப்பட்டதையொட்டி, கடைகள் உடைக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. சுற்று கிராமத்தினர் பஸ் மறியலில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கமுதி வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளராகவும், தேவேந்திரகுல இளைஞர் பேரவை நிறுவனராகவும் உள்ளார். இவர் , கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் நின்றுகொண்டிந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கால், தலை மற்றும் கழுத்து உட்பட 12 இடங்களில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. உயிருக்கு போராடிய ராஜ்குமாரை, கமுதி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் , மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதினிடையே, இவரது ஆதரவாளர்கள் கமுதி பகுதியில் உள்ள சிலகடைகளை அடித்து நொறுக்கினர். ஒரு கடைக்கு தீயும் வைத்தனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் பெரும் சேதம் தடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பதட்டமான சூழல் உருவானதால், கமுதி நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுற்று பகுதி கிராமத்தினர் பஸ் மறியலில் ஈடுப்பட்டதால், அப்பகுதியில் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அமல்ராஜ் டி.ஐ.ஜி ., மேற்பார்வையில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments