சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு அதிமுக. மதிமுக வெளிநடப்பு

சென்னை:  சட்டசபை கேள்விநேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசும் போது தமிழகத்தில் சிறுவர் சிறுமியர் கடத்தல், கொலை,கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருவது குறித்து பேச அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் அனுமதி மறுத்தார். காங்கிரஸ் கட்சியினர் அடிக்கும் ஜால்ராவிற்கு மட்டுமே சபாநாயகர் அனுமதி தருகிறார்.எனவே இதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக செங்கோட்டையன் கூறினார். அவரை தொடர்ந்து ம.தி.மு.க.,வை சேர்ந்த சதன் திருமைலக்குமார் பேசும் போது முதல்வரின் அறிக்கையில் முக்கியமானவை எதுவும் குறிப்பிடப்படவில்லை.பொது பிரச்னைகள் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து மதிமுக வெளிநடப்பு செய்கிறது என கறினார். அடுத்த 6 மாதத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் சேனையின் எண்ணிக்கையை 260 ஆக உயர்த்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Comments