புதுடில்லி : காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், ஸ்பெக்ட்ரம் முறைகேடு ஆகிய விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பார்லிமென்டின் இருஅவைகளும் நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலையில் பார்லிமென்ட் கூடியவுடன், இரு அவைகளிலும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி நேரத்தை நடத்த விடாமல் கோஷங்கள் எழுப்பினர். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பார்லி., கூட்டு விசாரணைக்கு குழு அமைத்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கூச்சலிட்டனர்.உறுப்பினர்கள் செவி சாய்க்காததால் இரு அவைகளும் பகல் 12 மணி வரைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் அவை இருஅவைகளும் நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் அ.தி.மு.க., எம்.பி., மைத்திரேயன் , மத்திய அமைச்சர் ராசாவின் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்த விபரங்கள் அடங்கிய மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை காண்பித்தார். இதனை தொடர்ந்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
ஜெ., அறிக்கை : இதற்கிடையில் ''மத்திய அமைச்சர் ராசாவை ராஜினாமா செய்யக் கோரும் துணிச்சல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை'' என்று அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசா பதவி நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் ராசாவை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கு இந்தியர்கள் தந்தி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments