தேக்கடிக்கு வந்த வெளிநாட்டு மாற்றுத்திறனாளிகள்

கூடலூர் :வெளிநாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தேக்கடிக்கு சுற்றுலா வந்தனர்.இந்தியாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக ஸ்பெயின் நாட்டில் இருந்து அட்னான் ஸ்டோன் என்பவர் மாற்றுத்திறனாளிகள் பலரை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். இவர்களை தேக்கடியில் படகு சவாரிக்கு அழைத்துச் சென்றார். முதன்முதலாக வெளிநாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் ஒன்று சேர்ந்து தேக்கடிக்கு வந்ததால் கேரள வனத்துறையினர் அவர்களை சிறப்பு அழைப்பாளர்களாக கவுரவித்தனர்.

Comments