லண்டன் : பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விருந்து ஒன்றினை நேற்று தன் மாளிகையில் நடத்தினார். அப்போது பேசிய அவர், பிரிட்டனின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பினை நினைவு கூர்ந்தார்.லண்டன் டவுனிங் தெருவில் உள்ள 10ம் எண், பிரதமர் மாளிகையில் நேற்று இரவு தீபாவளிக்கான விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இந்திய ஹை கமிஷனர் நளின் சூரி, பிரிட்டனின் இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள், முக்கிய இந்திய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், டேவிட் கேமரூன் பேசுகையில்,"உலகில் இந்தியாவுக்கு அடுத்த மிகப் பெரிய அளவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவது, லீசெஸ்டரில்தான். பிரிட்டனுக்காக இந்தியர்கள் ஆற்றிய பங்களிப்பை நாங்கள் மதிக்கின்றோம். தொழில், கலாசாரம் மற்றும் கலை ஆகியவற்றில் அவர்கள் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர்' என்றார்.பின், தன்னுடன் இணைந்து விளக்கேற்ற வேண்டும் என, நளினை அவர் அழைத்தார். ஆனால், பிரிட்டன் பிரதமர் என்ற முறையில் அவரே விளக்கேற்ற வேண்டும் என, நளின் கேட்டுக் கொண்டார்.
Comments