புதுடில்லி : மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கொடூர சம்பவத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பார்லி.,யில் எம்.பி.,க்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக பயங்கரவாத்திற்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுவது குறித்து சபாநாயகர் மீராகுமார் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சபையில் கூச்சல குழப்பம் நிலவியதை அடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட 9 உடல்கள் ஜெயில் அருகே ரகசியமாக கொண்டு சென்று புதைக்கப்பட்டது. காலையில் மும்பை போலீஸ் படையினர் பங்கேற்ற அமைதி அணிவகுப்பு நடந்தது. அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து மாநில அரசுகளும் உஷார் நிலையில் இருக்குமாறு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது . தவிர, பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் 2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இத்தாக்குதல் சம்பவத்தின் இரண்டாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பைத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தன. தவிர, காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், டில்லியில் ஊடுருவி முக்கிய மார்க்கெட் பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டது. நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. கடற்கரையோர பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பையை ஒட்டிய கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, மும்பைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மும்பை போரிவிலி பகுதியில் நினைவு தின நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், முரளி தியோரா மற்றும் மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதேபோன்று, டில்லி இந்தியா கேட் பகுதியில், சைக்கிள் பேரணியும், அமைதி பேரணியும் நடந்தது. இதில், மும்பைத் தாக்குதலில் பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த கமாண்டோ படை வீரர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை கலந்து கொண்டார்.. இதேபோன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உடல் புதைப்பு : மும்பை தாக்குதலின் போது பயங்கராவாத செயலில் ஈடுபட்ட 10 பேரில் முக்கிய குற்றவாளி அஜ்மல் காசாப்பின் கூட்டாளிகள் 9 பேர் பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். இவர்கள் நேற்று மும்பையில் டலோஜா சிறையில் அடக்கம் செய்யப்பட்டனர். மும்பையி்ல் கடந்த 2008-ம் ஆண்டு நவ 26-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 10 பேர் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 166 பேர்பலியாயினர். இத்தாக்குதல் நடத்திய 10 பேரில் 9 பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிப்பட்டான். இந்நிலையில் பலியான 9 பயங்கரவாதிகளின் உடல்கள் மும்பையில் டலோஜா சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டதாக போலீஸ் உயர் வட்டாரம் தெரிவிக்கிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் 2-வது ஆண்டு தினத்தையொட்டி இவர்கள் அடக்கம் செய்யபடுவது குறிப்பிடத்தக்கது.
கசாப் கோரிக்கை: மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினத்தை கனத்த இதயங்களுடன் நாடே அனுசரித்துக் கொண்டிருக்கும் நிலையில் , கோர தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் அவன் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளான். கசாபின் இந்த கோரிக்கை பரவலாக மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கசாபின் வக்கீல் அமின்சோல்கர் கூறுகையில் : கசாப் அவன் மீதான வழக்கு விசாரணையில் சில முக்கிய சாட்சிகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும் , முக்கிய சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல் : மன்மோகன்சிங் இரங்கல் குறி்ப்பு வெளியிட்டுள்ளார். அதி்ல் மும்பை தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினரின் துக்கத்தில் தேசம் முழுவதும் பங்கேற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மும்பை மக்களின் ஒற்றுமையையும், தாக்குதலுக்குப் பிறகு வீரத்துடன் எழுச்சி கண்ட திடத்தையும் பெரிதும் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா காட்டம்: "மும்பைத் தாக்குதல் வழக்கில் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என பாகிஸ்தானை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதலின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி, மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் நடைபெறும் மும்பைத் தாக்குதல் வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஏழு முக்கிய குற்றவாளிகளுக்கு எதிராக தகுந்த ஆதாரங்களை பலமுறை வழங்கியும், பாகிஸ்தான் மெத்தனமாக செயல்படுவது வருத்தத்திற்குரியது.
தாக்குதல் தொடர்பான விரிவான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அளித்த பின்னும், பாகிஸ்தானின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு இல்லை. மேலும், ஆதாரங்கள் தேவை என்று கூறி வழக்கை இழுத்தடித்து வருகிறது. இந்த விஷயத்தில், பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments