டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அதை காரணமாக வைத்து ராஜாவை நீக்குமாறு கூறி எதிர்க்கட்சியினர் பெரும் நெருக்குதலைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதியமைச்சகத்திடம் தரப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் இறுதி அறிக்கையை, நிதியமைச்சகம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் முறையாக நடைபெற முடியாமல் ஸ்தம்பித்துப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments