கராட்: மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய முதல்வராக பிரித்விராஜ் சவான் பதவி யேற்றுள்ளார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் சர்க்கரை கிண்ணம் என்றழைக்கப்படும் சதாரா மாவட்டத்தை சேர்ந்தவர்.இவருடன் இதே மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளனர். ஒருவர் உ.பி.,மாநில முதல்வராகபதவி வகித்துள் ளார்.1957ல் நடைபெற்ற தேர்தலில் கராட் தொகுதியில் யஷ்வந்த்ராவ் சவான் காங்கிரஸ் கட்சி சார்பில்நின்று வெற்றி பெற்றார். பின்னர் 1960-ல் மே மாதம் ஒன்றாம் தேதி பாம்பே ஸ்டேட் மும்பை மாநிலமாக மாறியதை அடுத்து அதன் முதல் முதல்வராக பதவி வகித்தார்.அதேபோல் இம்மாவட்டத்தை சேர்ந்த நந்த்வால் கிராமத்தை சேர்ந்ததேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நான்கு முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த பாபாசாகேப் போஸ்லேவும் இதே மாவட்டத்தை சேர்ந்தவராவார்.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் சுசில்குமார் ஷிண்டேவும் இதே மாவட்டத்தை சேர்ந்தவர். இவரும் மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார்.பண்டிட் கோவிந்த பல்லாப் பாண்ட் என்பவர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனால் உ.பி.,மாநில முதல் வராக பதவிவகித்துள்ளார்.
அரசியலில் நேர்மைக்கு பெயர் பெற்ற மேற்கண்ட அனைவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந் தவர் என்பது இம்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று முன்னாள் எம்.பியும் இம் மாவட்டத்தை சேர்ந்தவருமான ஸ்ரீனிவாஸ் பாட்டில் தெரிவித்துள்ளார்.மேலும் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒவ் வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் ஏதாவது ஒரு அரசியல் கட்சிதொடர்புடையவர்களாக இருப்பவர் என அவர் தெரிவித்தார்.

Comments