சபரிமலை வருமானம் 9 நாட்களில் ரூ.15 கோடி

சபரிமலை : சபரிமலை நடை திறந்து ஒன்பது நாட்களில், வருமானம் 15 கோடி ரூபாயை கடந்தது. அரவணை விற்பனையில் 6.09 கோடி, அப்பம் விற்பனையில் 1.37 கோடி, காணிக்கையாக 6.27 கோடி ரூபாய், என மொத்தம் 15 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 42 லட்ச ரூபாய் அதிகமாகும். சபரிமலையில் தற்போது தேவசம்போர்டு, அய்யப்பா சேவா சங்கம், சென்னை பரோபகார், பெங்களூர் எஸ்.எம். அய்யப்பா சேவா சமாஜ், என ஐந்து அமைப்புகள் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. இதில், தேவசம்போர்டு அன்னதானத்தில் உணவை கீழ் தளத்தில் இருந்து முதல் தளத்துக்குக் கொண்டு செல்வதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் வகையில் லிப்ட் வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments