புதுடில்லி : டில்லியில் நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 65 பேர் பலியாயினர். 80 பேர் படுகாயமடைந்து டில்லி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 15 ஆண்டு காலம் வயது உடைய இந்த குடியிருப்பின் மேல் மாடியில் கூடுதலாக 5 வது மாடிக்கட்டடம் எழுப்பும் பட்சத்தில் இந்த கட்டடம் இடிந்திருக்கிறது.
இதற்கு டில்லி நகர அமைப்பின் அனுமதி பெறவில்லை என்ற உண்மை இப்போது வெளிவந்திருக்கிறது. இதே நேரத்தல் பலி எண்ணிக்கை 65 ஐ தொட்டு விட்டது. பலியான குடும்பத்தினருக்கு டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பலரும் முதல்வரை கட்டிப்பிடித்து அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
டில்லி, லட்சுமிநகர், லலிதா பார்க் பகுதியில் உள்ள நான்கு அடுக்கு அடுக்குமாடி கட்டடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த 45 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். தொடர்ந்து உயிர்ப்பலி எண்ணிக்கை 65 ஐ தாண்டி விட்டது. மேலும் 80 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த இடிபாடுகளுக்குள் 50 பேர் வரை சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உள்ளூர் மக்கள் உதவியுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்' என்றார். டில்லியில் பெய்த கனமழையால் பெரும்பாலான பழைய கட்டடங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
முதல்வர் ஷீலா தீட்சித் பார்வை : இந்த சம்பவம் நடந்த இடத்தை டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் பார்வையிட்டார். பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கட்டட உரிமையார் விதி மீறியது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். கவனக்குறைவு காரணமாக இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள சுற்றுப்பகுதி கட்டடங்கள் குறித்தும் ஆய்வு நடத்த அறிவுறுத்தியுள்ளேன். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாகவும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ . 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றார். சம்பந்தப்பட்ட குடியிருப்பு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி உயிர்ப்பலியை தவிர்க்கலாமே : கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை பைபாஸ் ரோட்டில் ஒரு குடியிருப்பு கட்டடம் இடிந்ததில் 3 பேர் இறந்தனர். 8 பேர் காயமுற்றனர். இதனை தொடர்ந்து டில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின்னரும் மாநில , மத்திய அரசுகள் விழித்து கொள்ளாவிட்டால் கூடுதல் உயிர்கள் காவு கொடுக்க வேண்டியிருக்கும். நகர மற்றும் மாநகர , பஞ்சாயத்து துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயம். நகர் முழுவதும் உள்ள கட்டட வயது மற்றும் பலம் குறித்து ஒரு கணக்கெடுப்பு எடுத்து , கட்டடத்தின் சக்தி சந்தேகம் தரும் பட்சத்தில் இதில் வசிப்போருக்கு எச்சரிக்கை கொடுத்து வெளியேற்றலாம். அதிகாரிகள் , ஆளும் நிர்வாகிகள் கவனிப்பார்களா?
உயிர்ப்லியை மறந்த எம்.பி.,க்கள்: இன்று பார்லி., கூட்டம் துவங்கியதும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்தே கேள்வி எழுப்பினர். டில்லியில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து யாரும் கவலைப்படவில்லை. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்கும் எண்ணம் இல்லாமல் போனது. மேலும் இது போன்ற விதிமுறை மீறல் சம்பவம் பார்லி., முன்பு மக்கள் பிரதிநிதிகள் எழுப்பியிருக்க வேண்டும். இது மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வழிப்பிறக்கும், ஆனால் இன்றைய கூட்டத்தில் இது பற்றி ஒரு உறுப்பினரும் ஒரு வார்த்தையும் எழுப்பவில்லை.

Comments